டாக்டர் தருமாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்

Submitted by Megha on Wed, 15/05/2024 - 15:07
தமிழ்நாடு CM
Scheme Open
Dr. Dharmambal Ammaiyar Ninaivu Widow Remarriage Assistance Scheme Logo
Highlights
  • பட்டதாரி அல்லாத விதவைகளுக்கு நிதி உதவி ரூ. 25,000/-.
  • பட்டதாரி விதவைகளுக்கு நிதி உதவி ரூ. 50,000/-.
  • திருமாங்கல்யத்திற்காக இரு பிரிவினருக்கும் 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.
Customer Care
  • தமிழ்நாடு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை உதவி எண் :- 044-24351891.
திட்டம் பற்றிய சிறப்பு பார்வை
திட்டத்தின் பெயர் டாக்டர் தருமாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்.
பயன்கள்
  • நிதி உதவித்தொகை ரூ. 25,000/- மற்றும் ரூ. 50,000/-.
  • 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம்.
பயனாளிகள் மறுமணம் செய்து கொள்ளும் விதவை.
வயது வரம்பு
  • மணப்பெண்ணுக்கான வயது 20.
  • மணமகனின் வயது 40 அல்லது 40 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
குறைத் தீர்க்கும் பிரிவு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு.
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் பொது சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.

திட்ட அறிமுகம்

  • நம் நாட்டில், பல விதவைகள் தங்கள் கணவனை இழந்த பிறகு பல சவால்களை எதிர்கொள்கின்றனர். சமூகம் பெரும்பாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது மற்றும் அவர்களை விமர்சிக்கின்றது.
  • அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, அவர்களுக்கு மறுமணம் செய்துகொள்ளும் வாய்ப்ப அளிக்க வேண்டும்.
  • விதவைகளின் மறுமணத்தை ஊக்குவிக்கவும், அவர்களின் மறுவாழ்வு வசதிக்காகவும் தமிழ்நாடு அரசு "டாக்டர் தருமாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்" என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • டாக்டர் தருமாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டத்தின் குறைத் தீர்க்கும் பிரிவு, 'சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு'.
  • விதவைகள் மறுமணம் செய்தவுடன் மூலம் அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.
  • டாக்டர் தருமாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயனாளிகள் பின்வரும் இரண்டு வகைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன :-
    • பட்டதாரி விதவைப் பெண்கள்.
    • பட்டதாரி அல்லாத விதவைப் பெண்கள்.
  • இத்திட்டத்தின் கீழ், பட்டதாரி அல்லாத விதவைகளுக்கு நிதி உதவியாக ரூ. 25,000/-.
  • பட்டதாரி விதவைகளுக்கு நிதி உதவியாக ரூ. 50,000/-.
  • மேலும், பட்டதாரி மற்றும் பட்டதாரி அல்லாத விதவை இருவருக்கும் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம் வழங்கப்படும்.
  • பயனாளிகள், 'டாக்டர் தருமாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டத்தின் பயன்களை பெற அருகிலுள்ள பொது சேவை மையம் (CSC) சென்று விண்ணப்பிக்களாம்.

திட்டத்தின் பயன்கள்

  • டாக்டர் தருமாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு பின்வரும் பயன்கள் கிடைக்கப்படும் :-
    பயனாளி பயன்கள்
    பட்டதாரி அல்லாதவர்களுக்கு
    • நிதி உதவித்தொகை ரூ. 25,000/- :-
      • ரூ. 15,000/- மின்னணு பரிமாற்றம் மூலம்.
      • ரூ. 10,000/- தேசிய சேமிப்பு சான்றிதழ்.
    • 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம்.
    பட்டதாரி மற்றும் பட்டயப்படிப்பு உடையவர்கள்
    • நிதி உதவித்தொகை ரூ. 50,000/- :-
      • ரூ. 30,000/- மின்னணு பரிமாற்றம் மூலம்.
      • ரூ. 20,000/- தேசிய சேமிப்பு சான்றிதழ்.
    • 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம்.

தகுதி நெறி முறைகள்

  • கீழே குறிப்பிட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தியடைபவர்கள், டாக்டர் தருமாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டத்திற்க்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் :-
    • தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
    • மணப்பெண்ணுக்கான வயது 20.
    • மணமகனின் வயது 40 அல்லது 40 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
    • வருமான வரம்பு இல்லை.
    • குறைந்தபட்ச கல்வித் தகுதி தேவையில்லை.

தேவையான ஆவணங்கள்

  • டாக்டர் தருமாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டத்தில் விண்ணப்பிக்கும் பொழுது தேவைப்படும் ஆவணங்கள் பின்வருமாறு :-
    • மணமகள் மற்றும் மணமகனின் வயதுச் சான்று.
    • முதல் கணவரின் இறப்புச் சான்றிதழ்.
    • திருமண புகைப்படம்.
    • குடும்ப அட்டை.
    • ஆதார் அட்டை.
    • இரண்டாவது திருமணத்தின் திருமணச் சான்றிதழ்.
    • விதவை சான்றிதழ்.
    • திருமண அழைப்பிதழ்.
    • சாதிச் சான்றிதழ்.
    • குடியிருப்பு சான்று.
    • மணமகள் கல்விச் சான்றிதழ்.

விண்ணப்பிக்கும் முறை

  • பயனாளிகள் அருகிலுள்ள பொது சேவை மையத்தின் மூலம், டாக்டர் தருமாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிக்கலாம்.
  • பயனாளியின் சார்பாக அங்குள்ள முகவர் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணத்தை பதிவேற்றம் செய்வார்.
  • அதன் பிறகு பயனாளியின் விண்ணப்பப் படிவம் மற்றும் ஆவணங்கள் மாவட்ட சமூக நல அலுவலரால் ஆய்வு செய்யப்படும்.
  • ஏற்க்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பத்தை அதற்க்குறிய பயனாளிக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
  • ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, நிதி உதவித் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

திட்டத்தின் அம்சங்கள்

  • டாக்டர் தருமாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயன்களைப் பெற, மறுமண தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தின் போதுவ மணமகளின் குறைந்தபட்ச வயது 20 மற்றும் மணமகனின் வயது 40 அல்லது 40 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
  • இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறக்கூடிய விதவைகள் இரண்டு வகைகள் :-
    • பட்டதாரி அல்லாத விதவைகள், உதவித்தொகை ரூ. 25,000/- பெற தகுதியுடையவர்கள்.
    • பட்டதாரி மற்றும் பட்டயப்படிப்பு உடைய விதவைகள், உதவித்தொகை ரூ. 50,000/- பெற தகுதியுடையவர்கள்.
  • கல்வித் தகுதியில் பின்வரும் வகைகள் உள்ளன :-
    • நிதி உதவி ரூ. 25,000/- பெற, கல்வித் தகுதி தேவையில்லை.
    • நிதி உதவி ரூ. 50,000/- பெற, பட்டதாரி பட்டம் அல்லது பட்டயப்படிப்பு பெற்ற விதவைகளாக இருக்க வேண்டும்.

முக்கியமான இணைப்புகள்

தொடர்பு விபரங்கள்

  • தமிழ்நாடு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை உதவி எண் :- 044-24351891.
  • சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு,
    எண். 1 பனகல் மாளிகை கட்டிடம், 2வது தளம்,
    (கலைஞர் ஆர்ச் அருகில்), ஜீனிஸ் சாலை,
    சைதாப்பேட்டை, சென்னை - 600015.

புதிய கருத்தை சேர்

எளிய உரை

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்

Rich Format