தமிழ்நாடு கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டம்

Submitted by shahrukh on Thu, 02/05/2024 - 13:14
தமிழ்நாடு CM
Scheme Open
Highlights
  • விலையில்லா விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.
  • பின்வரும் விளையாட்டுகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் :-
    • மட்டைப்பந்து.
    • கால்பந்து.
    • பூப்பந்து.
    • சிலம்பம்.
    • கைப்பந்து.
Customer Care
  • கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டம் பற்றிய தகவல்களுக்கு கிராம பஞ்சாயத்து அலுவலகம் அல்லது தமிழ்நாடு அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறையின் மாவட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
திட்டம் பற்றிய ஒரு சிறப்பு பார்வை
திட்டத்தின் பெயர் தமிழ்நாடு கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டம்.
துவங்கிய தேதி 07-02-2024.
பயன்கள் விளையாட்டு பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
பயனாளிகள் தமிழ் நாடு மாணவர்கள்/விளையாட்டு வீரர்கள்.
சந்தா திட்டம் பற்றிய உடனடி தகவலுக்கு எங்களுடன் இணையுங்கள்/ பதிவில் இணைந்திருங்கள்.
விண்ணப்பிக்கும் முறை கலைஞர் விளையாட்டு பொருட்கள் திட்ட விண்ணப்ப படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

திட்ட அறிமுகம்

  • சமீபத்தில் நடந்து முடிந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் மகாராஷ்டிராவை அடுத்து தமிழ்நாடு ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்தது.
  • தேசிய அளவிலான போட்டியில் முதல் முறையாக தமிழ் நாடு இந்த இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் சிறப்பாகச் விளையாட, தமிழக அரசு புதிய விளையாட்டுத் திட்டத்தை மாநிலத்தில் அறிமுகப்படுத்த உள்ளது.
  • பிப்ரவரி 1ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்ட, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வீரர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுததினார்.
  • இத்திட்டத்தின் பெயர் "கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டம்".
  • தமிழ்நாடு அரசின் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டம் பிப்ரவரி 7ஆம் தேதி 2024 அன்று திருச்சியில் தொடங்கப்பட்டது.
  • சாதனையாளர்கள் நகர்ப்புறத்திலிருந்து மட்டும் இல்லாமல் கிராமப்புறத்திலிருந்தும் வரவேண்டும் என்பதுதான், இத்திட்டத்த்தின் உண்மையான நோக்கம் ஆகும்.
  • இந்த திட்டம் பல் வேறு பெயர்களாலும் அறியப்படுகிறது :-
    • "தமிழ்நாடு கலைஞர் இலவச கிட் திட்டம்".
    • "தமிழ்நாடு கலைஞர் விளையாட்டு கிட் திட்டம்".
  • தகுதி பெற்ற தமிழக வீரர்களுக்கு விளையாட்டுப் பொருட்களை தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை, இலவசமாக வழங்கும்.
  • இத்திட்டம் வீரர்களை விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பு நன்கு தேர்ச்சி பெற்று தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பதக்கம் வெல்ல ஊக்குவிக்கும்.
  • அடிப்படையில் கிராமப்புற வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசின் இந்த இலவச விளையாட்டு கிட் திட்டத்தின் நோக்கமாகும்.
  • கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் 12,000 கிராம பஞ்சாயத்துகளின் மாணவர்கள் மற்றும் வீரர்களுக்கு இலவச விளையாட்டு பொருட்கள் வழங்கப்படும்.
  • கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டத்தில் தமிழகத்தில் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் 33 உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் பொருட்களை கொண்ட தொகுப்பு அமைந்துள்ளது.
  • தமிழக அரசின் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டத்தின் கீழ் கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, பூப்பந்து, சிலம்பம் ஆகிய விளையாட்டுகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்படும்.
  • கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் இத்திட்டத்துக்குரிய விண்ணப்பப் படிவம் வழங்கப்படும்.இதன்  மூலம் பயனாளிகள் கலைஞர் விளையாட்டு கிட் திட்டத்தின் கீழ் விலையில்லா ஸ்போர்ட்ஸ் கிட் பெற விண்ணப்பிக்கலாம்.
  • கலைஞர் ஸ்போர்ட் கிட் திட்டத்தின் ஆன்லைன் விண்ணப்பப் படிவம் தற்போது இயங்கவில்லை.

பயனாளிகள் தகுதி நெறி முறைகள்

  • தமிழ அரசு கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டத் :-
    • விலையில்லா விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.
    • பின்வரும் விளையாட்டுகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் :-
      • மட்டைப்பந்து.
      • கால்பந்து.
      • பூப்பந்து.
      • சிலம்பம்.
      • கைப்பந்து.

பயனாளிகள் தகுதி நெறி முறைகள்

  • தமிழ்க அரசின் விளையாட்டுத் துறை நிர்ணயித்துள்ள பின்வரும் தகுதி நிபந்தனைகளுக்கு தகுந்த வீரர்களுக்கு மட்டுமே கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டத்தின் கீழ் விலையில்லா விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்படும் :-
    • பயனாளி மாவட்டம்/ மாநில/ தேசிய அளவில் விளையாட்டு வீரராக இருக்க வேண்டும்.
    • விளையாட்டு வீரர் தமிழ்நாட்டின் நிரந்தர குடியிருமை பெற்றிருக்க இருக்க வேண்டும்.
    • பயனாளி விளையாட்டு வீரர் கிராமப் பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

  • தமிழ்நாடு கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு பின் வரும் ஆவணங்கள் தேவை :-
    • தமிழ்நாடு இருப்பிடச் சான்று.
    • ஆதார் சான்று.
    • கைபேசி எண்.
    • வருமான சான்று.
    • சாதி சான்றிதழ். (தேவைப்பட்டால்)

விண்ணப்பிக்கும் முறை

  • தகுதியுடைய விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு கலைஞர் ஸ்போர்ட்ஸ்  கிட் திட்டத்தின் கீழ் விலையில்லா விளையாட்டு பொருட்களை பெற விண்ணப்பப் படிவத்தை விண்ணப்பித்து பயன்பெறலாம்.
  • கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டத்தின் விண்ணப்பப் படிவம் கீழே குறிப்பிடப்பாடுள்ளம் அனைத்து அலுவலகத்திலும் இலவசமாகக் கிடைக்கும் :-
    • கிராம பஞ்சாயத்து அலுவலகம்.
    • இளைஞர் மற்றும் நலத்துறை மாவட்ட அலுவலகம்.
  • கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்ட விண்ணப்பப் படிவத்தை வாங்கி சரியாக நிரப்பவும்.
  • விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • விண்ணப்பப் படிவத்தை நிரப்பி அனைத்து ஆவணங்களுடன் சேர்த்து அதே அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
  • நீங்கள் கொடுத்த விண்ணப்பப் படிவங்கள் மற்றும் ஆவணங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிபார்ப்பார்கள்.
  • தகுதி வாய்ந்த மாணவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, விளையாட்டுப் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும்.
  • கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டத்தின் கீழ் விளையாட்டு உபகரணங்கள் பெற தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு அவர்களின் தோலை பேசி எண்ணுக்கு குறுந்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
  • கிராம பஞ்சாயத்து தகுதியுள்ள விளையாட்டு வீரருக்கு விலையில்லா விளையாட்டு உபகரணங்களை வழங்குவார்கள்.
  • தற்போது, ​​தமிழக அரசின் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டத்தின் இணையதளம் அல்லது ஆன்லைன் விண்ணப்பம்/ பதிவு இயங்கவில்லை.

முக்கிய இணைய தள இணைப்பு முகவரிகள்

  • தமிழ்நாடு கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டத்தின் விண்ணப்பப் படிவம் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் கிடைக்கும்.

பயனாளிகள் இணைய சேவை மையம்

  • கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்டம் பற்றிய தகவல்களுக்கு கிராம பஞ்சாயத்து அலுவலகம் அல்லது தமிழ்நாடு அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறையின் மாவட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

Comments

புதிய கருத்தை சேர்

எளிய உரை

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்

Rich Format