டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்

Submitted by shahrukh on Wed, 10/07/2024 - 12:53
தமிழ்நாடு CM
Scheme Open
Dr. Muthulakshmi Reddy Ninaivu Inter Caste Marriage Assistance Scheme Logo
Highlights
  • நிதி உதவி ரூ. 25,000/- மற்றும் ரூ. 50,000/-.
  • 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம்.
Customer Care
  • தமிழ்நாடு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை உதவி எண் :- 044-24351891.

திட்டம் பற்றிய சிறப்பு பார்வை

திட்டத்தின் பெயர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்.
பயன்கள்
  • நிதி உதவி ரூ. 25,000/- மற்றும் ரூ. 50,000/-.
  • 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம்.
பயனாளி கலப்பு திருமண தம்பதி
குறைத் தீர்க்கும் பிரிவு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு.
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் பொது சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.

திட்ட அறிமுகம்

  • "டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்" தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட மகளிர் நலத் திட்டங்களில் ஒன்றாகும்.
  • சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையானது, இத்திட்டத்தின் குறைத் தீர்க்கும் பிரிவாகும்
  • இந்தத் திட்டத்தைத் தொடங்குவதன் முக்கிய நோக்கம், சாதிகளுக்கிடையேயான கலப்பு திருமணத்தை ஊக்குவிப்பதன் மூலம் சாதி மற்றும் சமூக பாகுபாட்டை ஒழிப்பதாகும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், சாதிகளுக்கிடையேயான கலப்பு திருமணத் தம்பதிகளுக்கு திருமணத்திற்கான நிதி உதவி வழங்கப்படும்.
  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டமானது, தமிழ்நாடு திருமண உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டத்தின் கீழ், பின்வரும் இரண்டு பிரிவுகளாக பயனாளிகள் வரையறுக்கப்பட்டுள்ளன :-
    • பட்டதாரி அல்லாதவர்கள்.
    • பட்டதாரி அல்லது டிப்ளமோ உடையவர்கள்.
  • இத்திட்டத்தின் கீழ், பட்டதாரி அல்லாத விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 25,000/- வழங்கப்படும்.
  • பட்டதாரி விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 50,000/- வழங்கப்படும்.
  • மேலும், பட்டதாரி மற்றும் பட்டதாரி அல்லாத தம்பதிகளுக்கு 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம் திருமாங்கல்யத்திற்க்காக வழங்கப்படும்.
  • பயனாளிகள் பொது சேவை மையத்தின் மூலம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டத்தின் பயன்களைப் பெறலாம் (CSC).

திட்டத்தின் பயன்கள்

  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டத்தின் கீழ் தகுதியான தம்பதியினருக்கு பின்வரும் சலுகைகள் வழங்கப்படும் :-
    பயனாளி பயன்கள்
    பட்டதாரி அல்லாதவர்களுக்கு
    • நிதி உதவித்தொகை ரூ. 25,000/- :-
      • ரூ. 15,000/- மின்னணு பரிமாற்றம் மூலம்.
      • ரூ. 10,000/- தேசிய சேமிப்பு சான்றிதழ்.
    • 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம்.
    பட்டதாரி மற்றும் பட்டயப்படிப்பு உடையவர்கள்
    • நிதி உதவித்தொகை ரூ. 50,000/- :-
      • ரூ. 30,000/- மின்னணு பரிமாற்றம் மூலம்.
      • ரூ. 20,000/- தேசிய சேமிப்பு சான்றிதழ்.
    • 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம்.

தகுதி நெறி முறைகள்

  • கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்த தம்பதிகள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியுடையவர்கள் :-
  • தம்பதியர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • தம்பதியரிள் ஒருவர் எஸ்சி/ எஸ்டி சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  • வருமான வரம்பு இல்லை.
  • மணமகளின் வயது 18 ஆக இருக்க வேண்டும்.
  • மணமகனின் வயது 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்ச கல்வித் தகுதி தேவையில்லை.

தேவையான ஆவணங்கள்

  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டத்தின் கீழ், நிதி உதவிக்கு விண்ணப்பிக்கும் போது பின்வரும் ஆவணங்கள் தேவைப்படுகின்றன :-
    • திருமணச் சான்றிதழ்.
    • மணமகள் கல்விச் சான்றிதழ்.
    • சாதி சான்றிதழ்.
    • தமிழ்நாட்டின் வசிப்பிடச் சான்று.
    • மணமகன் மற்றும் மணமகளின் வயதுச் சான்று.
    • ஆதார் அட்டை.
    • திருமண புகைப்படம்.

விண்ணப்பிக்கும் முறை

  • பயனாளிகள் பொது சேவை மையத்தின் மூலம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டத்தின் பயன்களைப் பெறலாம்.
  • விண்னப்ப படிவத்தை பயனாளியின் சார்பாக, முகவர் மூலம் பூர்த்தி செய்து தேவையான ஆவணத்தை பதிவேற்றவும்.
  • பின்னர், பயனாளியின் விண்ணப்பப் படிவம் மற்றும் ஆவணங்கள் மாவட்ட சமூக நல அலுவலரால் ஆய்வு செய்யப்படும்.
  • விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டாலும் நிராகரித்தாலும் பயனாளிக்கு எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
  • ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், நிதித் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் மாற்றப்படும்.

திட்டத்தின் அம்சங்கள்

  • திருமண தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்குள், பயனாளி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
  • மணமகள் மற்றும் மணமகனின் வயது வரம்பு 18 மற்றும் 21 ஆக இருக்க வேண்டும்.
  • சாதிகளுக்கிடையேயான கலப்பு திருமணத் திட்டத்தில், பயனாளிகள் பின்வரும் தகுதியுடையவராக இருக்க வேண்டும் :-
    • தம்பதியரிள் ஒருவர் பட்டியல் இண/ பட்டியல் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவராகவும், மற்றவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
    • தம்பதியரிள் ஒருவர் முற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர், மற்றவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டத்தின் கீழ் பயன்களை பெற தேவையான கல்வித் தகுதிகள் பின்வருமாரு :-
    • ரூ. 25,000/- நிதி உதவிக்கு, மணமகள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மணமகள் பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்றால் அவர் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.
    • ரூ. 50,000/- நிதி உதவிக்கு, மணமகள் முறைசார்ந்த கல்லூரிகள், தொலைதூர கல்வி/ அரசு அங்கீகரிக்கப்பட்ட திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ பெற்றவர்கள் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

முக்கியமான இணைப்புகள்

தொடர்பு விபரங்கள்

  • தமிழ்நாடு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை உதவி எண் :- 044-24351891.
  • சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு
    எண். 1 பனகல் மாளிகை கட்டிடம், 2வது தளம்,
    (கலைஞர் ஆர்ச் அருகில்), ஜீனிஸ் சாலை,
    சைதாப்பேட்டை, சென்னை - 600015.

புதிய கருத்தை சேர்

எளிய உரை

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்

Rich Format